26.8.2020 #ராதை_பிறந்தநாள்.

நீங்கள் மஹாலக்ஷ்மி என்கிற
ராதயை வணங்கினால்
கிருஷ்ண பரமாத்மா திருப்தியாகி, பணப்புழக்கம் அதிகமாக ஆவதற்கு,
உங்களுக்கு வேலை கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு வியாபாரம் அதிகமாகும்.

பிருந்தாவனத்தில் பர்சானா என்ற இடத்தில் ராதை அவதரித்தார்.

இரண்டுதடவை,மதுரா,பிருந்தாவனம் சென்று வரும் பாக்கியம் கிடைத்தது.

இங்கே கிருஷ்ணரும் ராதையும் சேர்ந்து விளையாடிய இடங்கள் அனைத்தும் புண்ணியமான இடங்களாக அங்கே ஆக்கி வைத்திருக்கிறார்கள்.

அப்படி ஒரு இடத்தில்,
ஒரு சிறிய பார்க் போல உள்ள இடத்தில் இருவரும் விளையாடிய இடம் ஒன்று உள்ளது.

என்ன விசேஷம் என்றால்,
இன்றும் அந்த ஊரில் இறந்தவர்களை எடுத்துச் செல்லும்போது,

இந்த பார்க் இருக்கும் இடத்தில்,
கீழே வைத்து,
அங்கு உள்ள மண்ணை எடுத்து,
பாதையில் உள்ள இறந்த உடலின் நெஞ்சில் போடுவார்கள்.
மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை.

ஒரு சிறு கைப்பிடி அளவு எடுத்து
சேர்த்து எடுத்து வந்து
கட்டிடம் கட்டும் போது
அஸ்திவார கலவையுடன் கலந்து கட்டினால்,
பில்லி சூனியம்,வாஸ்து தோஷம் அனைத்தும் காணாமல் போய்விடுமாம்…

source