*”கோபுர தரிசனம் – கோடி புண்ணியம் – கோபுர தரிசனம் – பாவ விமோசனம்”*

*தென்னாடுடைய* *சிவனே போற்றி*
*எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி*

*உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில்*

*பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும்*
*தேவாரம் பாடிய நாயன்மார்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரதும் பாடல் பெற்ற சிறப்புப் பெற்றது.*

*நந்திவர்ம பல்லவனால் அமைக்கப்பட்ட இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் மார்க்கண்டேயரைக் காப்பாற்றுவதாக உறுதியளித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள நான்காவது சிவத்தலமாகும்.*

*தேவாரம் பாடல் பெற்ற*
*உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்*

*மூலவர்:*
*உச்சிநாதர், முக்தீசர், கற்பகநாதர்*

*உற்சவர்:*
*உஜ்ஜீவநாதஸ்வாமி*

*தாயார்:*
*அஞ்சனாட்சி, அஞ்சனாக்ஷி* *(மைவிழியம்மை),*

*உற்சவர் தாயார்:*
*பாலாம்பிகை*.

*தல விருட்சம்*:
*வில்வம்*

*தீர்த்தம்:*
*பொன்னொளிர் ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோணக்கிணறு, நாற்கோணக்கிணறு*

*ஆகமம்*:
*சிவாகமம்*

*தல வரலாறு*

*தற்போது இப்பகுதி மக்கள் வழக்கில் உய்யக்கொண்டான்மலை என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.*
*இறைவன் கல்லில் – மலையில் குடியிருப்பதால் கற்குடி என்னும் பெயர் பெற்றது.*
*இத்தலத்தில்தான் மார்க்கண்டேயரைக் காப்பாற்றுவதாக உறுதியளித்து இறைவன் அருள் புரிந்தார்.*

*சிறப்புக்கள்*

*நந்திவர்ம பல்லவ மன்னனால் அமைக்கப்பெற்ற* *கற்கோயில்*
*இத்திருக்கோவில்* *அமைந்த பகுதிக்கு* *நந்திவர்ம மங்கலம் ‘ என்னும் பெயருண்டு*

*இக்கோவிலில் கரன் வழிபட்ட சிவலிங்கம் ‘இடர்காத்தார் ‘ என்னும் பெயருடன் திகழ்கிறது.*
*கொடிமரத்தின் முன்பு, மார்க்கண்டேயனைக் காப்பதற்கு – எமனைத் தடுப்பதற்காகக் கருவறை விட்டு நீங்கி வந்து நின்ற, சுவாமியின் – பாதம் உள்ளது.*

*மூலவர் சுயம்பு மூர்த்தி, சதுர ஆவுடையாரில் அழகாக காட்சித் தருகிறார்.*

*இத்தலத்தில் உள்ள தீர்த்தங்களில் குடமுருட்டி என்பது, (தஞ்சை மாவட்டத்தில் ஓடும் ஆறு அல்ல. இது வேறு) சர்ப்பநதி, உய்யக்கொண்டான் நதி என்றும், கல்வெட்டில் வைரமேகவாய்க்கால் என்றும் உள்ளது.*
*இத்திருக்கோவில் கல்வெட்டில் ‘நந்திவர்ம மங்கலம்’,’ராஜாஸ்ரய சதுர்வேதி மங்கலம்’ இவ்வூர் என்றும்; இறைவன் ‘உய்யக்கொண்டநாதர் ‘ என்றும் குறிக்கப்படுகிறது.*

*கி. பி. 18ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப் போரின்போது இக்கோயில் பிரெஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும் மைசூர்க்காரரும் மாறிமாறித் தங்கியிருப்பதற்குரிய யுத்த அரணாக விளங்கியதாக[அறியப்படுகிறது*

source